Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12 வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டி.திருச்சி எஸ் பி ஐ ஓ ஏ மெட்ரிக் பள்ளி சுழல் கோப்பையை வென்றது.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் லைன்ஸ் கிளப் திருச்சி பிரீமியர் சார்பில் திருச்சி கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து
(ஹேண்ட் பால்) போட்டியினை திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் திருச்சி பிரீமியர் செகரட்டரி வசந்தகுமார், தலைவர் சரவணகுமார், பள்ளி முதல்வர் செல்வம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி தாளாளர் கணபதி சுப்ரமணியன், தேசியக் கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற எஸ் பி ஐ ஓ ஏ மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு லயன்ஸ் கிளப் ஆப் திருச்சி பிரீமியர் சுழற் கோப்பையை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கருணாகரன் சிறப்பாக ஒருங்கிணைத்து இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.