Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 ஆண்டு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ யினர் மனித சங்கிலி போராட்டம் .

0

'- Advertisement -

20ஆண்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்
மனித சங்கிலி போராட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக 6 தமிழர்கள் உட்பட 20 ஆண்டுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி தென்னூர் ஹைரோடு பகுதியில் இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி துணைச் செயலாளர் சிராஜ்., வரவேற்புரையாற்றினார்.
சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஜ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி. சிறப்புரை நிகழ்த்தினார்.
மேற்கு தொகுதி துணை தலைவர் தௌலத் நிஷா சிற்றுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட
துணை தலைவர் பிச்சை கனி,
பொது செயலாளர் தமீம் அன்சாரி,
மாவட்ட செயலாளர்கள் மதர். ஜமால்முகமது.,ஏர்போர்ட் மஜீத்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மர்சூக்,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மேற்கு தொகுதி துணை தலைவர் ரியாஸ்,மற்றும்
வர்த்தகர் அணி செயலாளர் ஷேக் ,தென்னூர் கிளை செயல்வீரர் அக்தர் ஆகியோர் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வினை
மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா தொகுத்து வழங்கினார்.

இதில் தொகுதி, அணி, கிளை நிர்வாகிகள், மற்றும்
ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியாக மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நன்றி கூறினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.