Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போட்டித் தேர்வுகளில் அசத்திய காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு.

0

'- Advertisement -

“போட்டித் தேர்வுகளில் அசத்தும் அரசுப் பள்ளி”
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தி வருகிறார்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனறித் தேர்வு (NMMS) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2021 -22-ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேர்வில் இப் பள்ளியைச் சேர்ந்த 1.V. மதுப்பிரியா 2.R.பிரவீன் 3. M.பிரவீனா 4.G.பத்மப்ரியா 5.B.திவ்யா 6.S நிவாஸ் என்ற 6-மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இதில் மதுப் பிரியா என்ற மாணவி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார் . இவர்களுக்கு ஊக்கத்தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ரூபாய் 1000 /அரசால் வழங்கப்படுகிறது.

இதைப்போலவே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் “ஊரகத் திறனாய்வுத் தேர்வில்”(TRUST). 1.R இலக்கியா 2.S.D.கனிஷ்கா 3.S இனியா என்ற மூன்று மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 1000/-அரசால் வழங்கப்படுகிறது.இதில் இலக்கியா கனிஷ்கா இருவரும் NMMS தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் என்பது சிறப்பிற்குரியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் இப்பள்ளி ஆண்டுதோறும் தொடர்ந்து 100% தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தலைமை ஆசிரியர் தி.கீதா தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

“எனது அஞ்சல் தலை” என்ற சிறப்பு அஞ்சல் தலை அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அஞ்சல் தலை வெளியிட்டு அவர்களைப் பாராட்டியது மாணவர்களுக்குப் பெரிதும் உற்சாகம் தருவதாக அமைந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.