சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை, திருச்சியில் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் மாநாடு.:டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பான ஏற்பாடு.

சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள அருண் ஓட்டல் சுமங்கலி மஹாலில் வருகின்ற 16.7.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் முறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ அக்குபஞ்சர் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் 23 வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாடு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர்களின் போர்வாள் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நல திட்ட உதவிகளை வழங்கி, விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். விழா மலரை மாநகராட்சி மேயர் அன்பழகன் பெற்றுக் கொள்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு தெரிவிக்க உள்ளார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் தமிழக முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள், மாமேதைகள் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாட்டை அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் விஜய் கார்த்திக், எஸ்.தமிழரசி சுப்பையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பிக்கிறார்கள்.
ஆகையால் இம்மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளருமான முனைவர் பா ஜான் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

