Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் துவாக்குடி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்
சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலச் செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட சொன்ன எங்களின் மாநில தலைவரை பதவி நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.