Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்  துவக்கி வைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (24.02.2022)  தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்றது.

TVK ad

இந்த இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியார் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த  நிகழ்வில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெ. சுகந்தி, தந்தை பெரியார் கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர். கா. வாசுதேவன், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின்  தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் தந்தை பெரியார் அரசு  கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். குணசேகரன், தந்தை பெரியார் அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர். நோபல் ஜெபக்குமார் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியர்கள்  முன்னிலை வகித்தனர்.


இந்த மாபெரும் இரத்ததான முகாமில்  தந்தை பெரியார் அரசு கல்லூரியின் 200 மாணவ மாணவிகள், பேராசிரியர்கள்  இரத்ததானம் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.