Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.

0

'- Advertisement -

திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.

Ad banner

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கேணித் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36) பெயிண்டரான இவர் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். மதுபோதையில இருந்த விஸ்வநாதன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

TVK ad

பின்னர் இவர் கை மற்றும் கால்களை திண்ணர் மூலம் கழுவிக் கொண்டிருந்தார்.

 

பின்னர் அவர் சிகரெட் பிடிப்பதற்காக தீ பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பற்றியது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.