திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்புமனு தாக்கல்.
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகனுக்கு வெற்றி வாய்ப்பு.
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேலசிந்தாமணி பகுதியை உள்ளடக்கிய 12வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் போட்டியிடுகிறார்.
வார்டு முழுவதும் மிகவும் பிரபலமான இவர் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
நாட்டின் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை வார்டுகளில் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12வது வார்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
12 வது வார்டில் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாலமுருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருங்காலங்களில் தீவிர பிரச்சாரம் மூலம் வார்டை தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.