Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

14 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

14 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

0

'- Advertisement -

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

Ad banner

இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சீரான இடைவேளியில் டெல்லி அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதியில் ரிஷப் பண்ட்-ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.

கடைசியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி இம்முறையும் ஆரம்பத்திலேயே பிரிந்தது.
டுப்ளஸ்ஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற,

பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்டினார். இந்த ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த தாக்கூரும், ராயுடுவும் அடுத்தடுத்து வெளியேற போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

முதலில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் பின்னர் அதிரடி காட்டினார். தன் பங்குக்கு 50 பத்துகளில் 70 ரன்கள் எடுத்த நிலையில் 19-ஆவது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

அடுத்த மூன்று பந்துகளையும் டோனி பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.இதன் மூலம் தான்  வெற்றிகரமான பினிஷேர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் தோனி.
தோனி 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இரண்டு பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் 173 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.