Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தினமணி நிருபர் கோபி சாலை விபத்தில் அகால மரணம்.

திருச்சி தினமணி நிருபர் கோபி சாலை விபத்தில் அகால மரணம்.

0

'- Advertisement -

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கி வந்த கார் சிறுகனுார் ராணே கம்பெனி அருகே வந்தபோது. கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள மரத்தில் மோதியது.

Ad banner

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி தினமணி நிருபர் கோபி (வயது 37) மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

TVK ad

விபத்து நடந்த இடத்திற்கு வந்த சிறுகனுார் போலீசார் உடல்களை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான நிருபர் கோபிக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

பழகிய காலம் சிறிதாயினும் அனைவரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர் இனிய நண்பரான மறைந்த நிருபர் கோபியின் குடும்பத்தாருக்கு திருச்சி எக்ஸ்பிரஸ்  மற்றும் திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.