Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் ராஜ்குமார்.

0

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் குப்பை எடுக்க முடியாது எனக் கூறும் மாநகராட்சி ஆணையர் இடி அமினா? ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் ராஜ்குமார்.

சமூக ஆர்வலரும், ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜான். ராஜ்குமார் பொது மக்கள் நலன் கருதி கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி சார்பில் சில பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று மாநகராட்சி ஆணையர் கூறியதாக கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீடுகளில் குப்பைகளை வாங்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.

மதுரை ஐகோர்ட்டில் தடுப்பூசி போடுவதும் , போடாததும் பொது மக்களின் விருப்பம்,தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு தான் ஏற்படுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு குப்பை வாங்க மாட்டோம் என கூறினால் பொதுமக்கள் அனைவரும் குப்பையை எடுத்துச்சென்று மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலையில் தான் கொட்ட வேண்டும்.

தடுப்பூசி போட முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் மாநகராட்சியின் கடமை.

கடந்த இரண்டு மாதமாக எங்குமே முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் சர்க்கரை, பிரஷர் போன்ற எந்த நோய் இருந்தாலும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை.

தமிழக முதல்வர் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறார்.ஆனால் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சொத்து சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சியின் சாதாரண பில் கலெக்டர் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை முறைகேடாக லஞ்சமாக சம்பாதிக்கின்றனர். முழு ஆதாரம் என்னிடம் உள்ளது.

சாதாரணமாக பைப் திறக்கும் பணிக்கு வந்து சூப்பர்வைசர்,பில் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று கடைசியாக மாநகராட்சி உதவி ஆணையராக பணி ஓய்வு பெறுகின்றனர்.

திருச்சியில் இடி அமீன், முசாலனி ஆட்சியா நடைபெறுகிறது ?

தடுப்புஊசி போடாதவர்கள் வீட்டில் குப்பை வாங்க கூடாது எனக் கூறும் இது போன்ற நிகழ்வுகளுக்கு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களும் உடனடியா ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரும்,ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜான். ராஜ்குமார் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.