அரசுக்கு உற்றத் தோழனாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் செயல்படும்.மா.பெ.செ. நா.மன்றம் சண்முகநாதன்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் திமுக அரசின் மசோதவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் நீட் 2021 தேர்வின் அச்சத்தில் சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த மாணவர் சி.தனுஷ் என்பவர் தற்கொலை செய்துக்கொண்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவரின் தற்கொலை மறைவிற்கும், பிரிவின் துயரில் வாடும் பெற்றோருக்கும் , உறவினர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இத்தகு துயரங்களுக்கு ம்,தற்கொலைகளுக்கும் முடிவு காணும் வகையில் அரசு எடுத்து வரும் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது.
ஒன்றிய அரசின் ஆள்கொல்லி
நீட் தேர்வினை,
தமிழகத்தில் தொடக்க காலம் முதலே திராவிடமுன்னேற்றக்கழகம் எதிர்த்து வருகிறது.
கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று திமுக தேர்தல் வாககுறுதி அளித்து இருந்தது.
அதனடிப்படையில்,
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் ஆராய்ந்திடும் வகையில் நீதியரசர் ஏ.கே. இராசன் தலைமையில் குழு அமைத்தது.
இக்குழுவின் பரிந்துரை அறிக்கையினை திமுக அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.
இவைகளின் அடிப்படையில் ,திமுக அரசு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவினை தாக்கல் செய்து உள்ளது.
மேலும், மேல்நிலைத் கல்வி இறுதியாண்டு
(+ 2 )மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்கள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உருவாக்கிஉள்ளனர் என்பதைக் கவனத்தில் கொண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையிலும் , மருத்துவ மாணாக்கர் சேர்க்கையில் 7.5 சதவிகித முன்னுரிமை ஒதுக்கீட்டினை பின்பற்றும் வகையிலும் திமுக அரசு சட்டமன்றத்தில் உறுதி அளித்து உள்ளது.
மத்திய அரசின் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற்று தமிழ்நாட்டின் மாணாக்கர்களின் மருத்துவக்கல்வி கனவினை நனவாக்கிடும் வகையிலான திமுக அரசின் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முழுமனதுடன் பெரிதும் வரவேற்கிறது.
அரசின் கல்வி நலன் சார்ந்த,
மாணாக்கர் நலன் சார்ந்த ,தமிழ்நாட்டின் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முழுமனதுடன் வரவேற்றும்,நன்றி பாராட்டியும்,மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பரப்புரைப்பணிச்செய்தும் திமுக அரசுக்கு உற்றத்தோழனாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் துணைநிற்கும் என்றும் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்..