கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டிட பொறியாளர்கள் சங்கமம் கூட்டம் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பொறியாளர் கணபதி தலைமையிலும்,
மாவட்ட தலைவர்கள் அன்பழகன், மாநில செய்தி தொடர்பாளர் தனபால், திருமாறன், முஹம்மது ஹம்சான், திருச்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் சுரேஷ் கோபி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில்
கட்டுமானத் துறைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு விலை நிர்ணய ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும்,
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க போலியான விலை ஏற்றத்தை தடுக்க தமிழக அரசு நேரடி விற்பனை நிலையத்தை அமைத்து கட்டுமானப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும், மேலும் மாட்டு வண்டியில் மணல் விற்பனை செய்யும் ஏழை விவசாயிகளுக்கு சரியான உரிமம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில செயலாளர் சாம்ராட் வரவேற்க, முடிவில் மாநில வணிக மேம்பாட்டு தலைவர் சாதிக் பாட்சா நன்றி கூறினார்.








