

விவசாயிகளின் கூட்டுறவு சங்க கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பனை மட்டை,உழவு மாடுகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் .
விவசாயிகளின் கூட்டுறவு சங்க கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சியில்கலெக்டர் அலுவலகம் அருகே 50 விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கையில் பனை மட்டை,உழவு மாடுடன்
நடத்தினர்.
தமிழக 50 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு சங்க அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய பாதுகாப்பு சங்க திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன்தலைமை தாங்கினார்.
50 விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், தமாகா விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம்,மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியான கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்திருந்தனர். அதன்படி அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே காவிரி டெல்டா பகுதியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைக்கட்ட துடிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் உற்பத்தி செலவு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான விவசாயிகள் பனை மட்டையை கையில் ஏந்தி கொண்டும், உழவு மாட்டை வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

