Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜனவரி 8ம் தேதி வரை ஆன்லைன் புக்கிங் ஃபுல், சபரிமலையில் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதி, ஆனால் சன்னிதானத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை வெறும் 37,000 மட்டுமே.என்ன நடக்கிறது தேவசம் போர்டு விசாரணை

0

'- Advertisement -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ad banner

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆன்லைனில் முன்கூட்டியே தரிசன நேரத்தைப் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி தினமும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களில் 66,000 பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 14,000 பேர் நேரடி முன்பதிவு மூலமாகவும் தரிசனம் செய்யலாம்.

 

இந்த நிலையில் கடந்த நவம்பர் 18-ந் தேதி சபரிமலையில் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதி இருந்தது. ஆனால் சன்னிதானத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை வெறும் 37,000 மட்டுமே என கூறப்படுகிறது. அதாவது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவானவர்களே தரிசனத்திற்கு வந்துள்ளனர்.

 

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சபரிமலையில் ஆன்லைன் தரிசன முன்பதிவு அடுத்த ஆண்டு 2027 ஜனவரி 8-ம் தேதி வரை முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் புதிதாக முன்பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களுக்கு இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களில் கணிசமானோர் தரிசனத்திற்கு வரவில்லை. ஒருபுறம் முன்பதிவு செய்ய இடமில்லை; மறுபுறம் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு வரவில்லை என்ற நிலை உள்ளது. இதன் பின்னணியில் சுற்றுலா நிறுவனங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சபரிமலைக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் சில சுற்றுலா நிறுவனங்கள் முன்கூட்டியே அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் முன்பதிவு செய்துவிட்டு, பின்னர் அந்தப் பக்தர்கள் தரிசனத்திற்கு வராமல் போயிருக்கலாம் என்பதுதான் அந்த சந்தேகம்.ஆனால், ஆதார் விவரங்களின் அடிப்படையிலேயே ஆன்லைன் தரிசன முன்பதிவு நடைபெறுவதால், சுற்றுலா நிறுவனங்கள் முறைகேடாக மொத்தமாக முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆன்லைன் முன்பதிவு முழுவதுமாக நிரம்பியிருந்தும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து விரிவான விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.