Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அந்தநல்லூர் திருக்கோயில் ஆய்வாளர் இதே மாவட்டத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவது எப்படி? இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி கேள்வி

0

'- Advertisement -

இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Ad banner

இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகமே

ஒரே மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆய்வாளர்! பணிச்சுழற்சி முறையை அமல்படுத்தி வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்

நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மண்டல இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தநல்லூர் திருக்கோயில் ஆய்வாளர், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிந்து வருவது கவனத்தை ஈர்க்கிறது.

ஒரே மாவட்டத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிவதற்கான நிர்வாகக் காரணங்கள் என்ன?

பணியிட மாற்றம் தொடர்பான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா…

ஒரு அலுவலர் நீண்டகாலமாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றும்போது, நிர்வாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பணிச்சுழற்சி முறை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுவது இயல்பானதாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட ஆய்வாளரின் பணிக்காலம், இதுவரை வகித்த பொறுப்புகள் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான அரசாணைகளின் பொருந்தும் தன்மை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நிர்வாக நலன் மற்றும் பொதுநலன் கருதி, விதிமுறைகளுக்கு உட்பட்டு, பல ஆண்டுகளாகத் திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அந்தநல்லூர் ஆய்வாளரை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையரைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே இடத்தில் நீண்டகாலப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யுமா இந்து சமய அறநிலை துறை நிர்வாகம்??

என மகேஸ்வரி வையாபுரி (வழக்கறிஞர் / நோட்டரி பப்ளிக் (மத்திய அரசு) நிறுவனர், இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கம். திருச்சிராப்பள்ளி. கைபேசி எண்: 9500299882. ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.