திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் நீரிழிவு விழித்திரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம்
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 15 ) நீரிழிவு விழித்திரை நோய் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் நடைப்பயணம் நடைபெற்றது.
திருச்சி ஸ்டூடன்ட்ஸ் சாலையில் தொடங்கிய இப்பேரணி, அண்ணா நகர் வழியாகச் சென்று மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

விழித்திரை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் பி. அனுக்ரஹா பிரசன்னா நிகழ்வை ஒருங்கிணைத்தார். நீரிழிவால் ஏற்படும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுக்க, முறையான விழித்திரைப் பரிசோதனை, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

