Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரூ. 5 லட்சம் கடன் தருவதாக கூறி ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.8 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த கும்பல்

0

'- Advertisement -

திருச்சியில் கடன் தருவதாக கூறி ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.8 லட்சத்து 31 ஆயிரத்து 367 மோசடி

Ad banner

சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

திருச்சியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் நான் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவன் என்றும், 5 லட்சம் ரூபாய் கடன் தருகிறோம் என்று கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி, அவர் அதற்கான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதன்பிறகு, மர்ம நபர்கள் கடன் தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டணங்களைக் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு கணக்கில் ரூ. 8 லட்சத்து 31 ஆயிரத்து 367 அனுப்பி உள்ளார். அதன்பிறகு, அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு உள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆன்லைன் மூலம் திருச்சி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.