Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் தம்பி , 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது.

0

'- Advertisement -

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டில் தொடர்புடைய ரவுடி கைது.. திருச்சியில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர்.

Ad banner

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டில் தொடர்புடைய ரவுடியை திருச்சியில் பதுங்கி இருந்த போது போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட, திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரையின் தம்பி சோமு என்கின்ற சோமசுந்தரம்.

இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி ஏர்போர்ட் அருகே பதுங்கி இருந்த போது கைது செய்தனர்.

திடீரென்று போலீசார் ஏர்போர்ட் பகுதியில் சோதனை நடத்தி ரவுடியை கைது செய்தது அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.