திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி,ரத்தினவேல் சிறப்புரை
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் .
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் சிறப்புரையாற்றினர்!
திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (10.10.2026 J அன்று மாலை 6 மணியளவில் திருச்சி தாராநல்லூர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான சி. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இப்பொதுக்கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் கலீலுர் ரஹ்மான், சுரேஷ் குப்தா, சுதாகர் மற்றும் அகிலாண்டம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
மேலும், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தைச் சிறப்பித்தனர்.
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது …

