திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் முகமது நாசர் தலைமையில் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் முகமது நாசர் தலைமையில் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல், நன்கொடை சேகரிப்புத் திட்டம் துவக்கம் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் அறிமுக நிகழ்வு என முப்பெரும் விழா மாவட்டச் செயலாளர் பாபு பாய் தலைமையில் தில்லைநகர் ராக்கி மினி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மஜக – பொதுச் செயலாளர் மௌலா முகமது நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை அகமது கபீர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் தர்வேஷ் வரவேற்புரையாற்றி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் தஞ்சை அகமது கபீர் திருச்சி மாவட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டியதோடு மட்டுமின்றி, கிளைகளை விரிவுபடுத்தி களத்தை வீரியப்படுத்துவதின் அவசியம் குறித்து கருத்துரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாநில துணைச் செயலாளராகவும், திருச்சி மாவட்ட மேலிடப் பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கும் திருச்சி எம்.முகமது ஷரிப்புக்கு பொதுச்செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக அவைத்தலைவர் ராஜா முஹம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாவட்ட செயலாளர் கமலேஷ், மஜக மருத்துவ சேவை அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜமால், இளைஞர் அணி மண்டல செயலாளர் பஷாரத், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் யூனுஸ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, திருச்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசர் ஷெரிப், அப்பாஸ், ஹபீப், ஷேக் மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

