Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடியில் வாடகைக்கு வீடு கேட்பது போல் மூதாட்டியின் 7 பவுன் நகையை பறித்த இளம் பெண்ணை சில மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசருக்கு குவியும் பாராட்டு

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து வரும் மூத்த தம்பதியினரின் வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு குடியிருக்க வீடு வாடகைக்கு தேவைப்படுவதாக கூறி, அந்த முதியவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவர்களின் வயது முதிர்வையும் தனியாக இருப்பதையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

Ad banner

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முதிய தம்பதியினர், உடனடியாக லால்குடி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரைத் தொடர்ந்து லால்குடி காவல் நிலையம் ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், நகையைப் பறித்துச் சென்றது லால்குடி மேலவாளை பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 23) என்ற பெண் என்பதை உறுதி செய்தனர்.இதையடுத்து விரைந்து செயல்பட்ட தனிப்படையினர், புகாரளிக்கப்பட்ட 22 மணி நேரத்திற்குள் தலைமறைவாக இருந்த உமா மகேஸ்வரியை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து மூதாட்டி இடம் இருந்து பறிக்கப்பட்ட 7 சவரன் தங்க நகையும் பத்திரமாக மீட்கப்பட்டது. முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொள்ளையில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த லால்குடி தனிப்படை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.