திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானம் அருகே அடிக்கடி நடந்து வரும் வழிப்பறி . சிறுவன் உட்பட 2 பேர் கைது
சைக்கிளில் சென்ற சிறுவனை வழிமறித்து செல்போன் பறிப்பு..
சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது…
திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது 15 வயது மகன் கடந்த 4-ந் தேதி சைக்கிளில் ஜி கார்னர் மைதானம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அந்த சிறுவனின் தந்தை தியாகராஜன் பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 18) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து ஜி.கார்னர் மைதானம் வரை உள்ள பகுதிகளில் சைக்கிள் மற்றும் நடந்து வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

