திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வணிகர்களும் பங்கேற்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ் பி பாபு அழைப்பு
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .
UPI பண பரிவர்த்தனைக்கு 0.4% வரியை வணிகர்கள் மீது விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும்,
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை தடை செய்ய கோரியும்,
சில்லரை வணிகத்தின் வளர்ச்சியை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் வினோத போக்கை கண்டித்தும் நாளை புதன்கிழமை காலை 10 அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் சில்லரை வணிகர்களே! அனைவரும் நமது உரிமையை காப்பதற்கு அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!! என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ் பி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் ..

