Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த விரைவு ரெயிலில் சாக்கு பையில் கிடந்த 23 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்த இரும்பு பாதை ரெயில்வே போலீசார்

0

'- Advertisement -

திருச்சி வந்த விரைவு ரெயிலில் சாக்கு பையில் கிடந்த 23 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்த

Ad banner

இரும்பு பாதை ரெயில்வே போலீசார்  விழுப்புரத்தில் இருந்து திருச்சி வந்த விரைவு ரெயிலில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 23 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை ரெயில்வே காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.

நேற்றிரவு திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு ரோந்து அலுவலக முதல் நிலைக் காவலர் கண்ணதாசன் தலைமையில் காவலர் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை வந்த புருளியா – திருநெல்வேலி விரைவு ரெயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ரெயில் நள்ளிரவு 12 மணியளவில் திருச்சி ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையை வந்தடைந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய சோதனையில், ரெயிலின் பின்புறம் உள்ள பொதுப் பெட்டியின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு சோல்டர் பேக் மற்றும் முன்புற பொதுப் பெட்டியின் இருக்கைக்குக் கீழ் இருந்த ஒரு சாக்குப்பை ஆகியவற்றை மீட்டனர்.

அவற்றைத் திறந்து சோதனை செய்தபோது, உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த எடை 23 கிலோ ஆகும். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.

இந்த கடத்தல் குறித்து திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.