Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமாவளவன் தலைமையில் ஆசிரியர்கள் கோரிக்கை மாநில மாநாடு நடத்த முடிவு

0

'- Advertisement -

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு மாநிலத் தலைவர் முனைவர் சி.மனோகரன் அவர்கள் தலைமையில் இன்று ( 30.9.2026, ) புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது.

Ad banner

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருவனாக நிறைவேற்றப்பட்டன.

​கடந்த மே-2026 ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

​பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.ராஜ்மோகன் அவர்களுக்கும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

​நடந்து முடிந்த ஆசிரியர்கள் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

​மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளது போல் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் பட்டியல்/பழங்குடியினர் இன ஊழியர்களுக்கு 16/4 A விதிமுறைகள் மூலம் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். படத்திலுள்ள உரை (Text) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

​5) பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணிதவிர பிற பணிகள் வழங்குவதை முற்றாக கைவிடவேண்டும்.

(EMIS Online work, சென்சஸ் பணி, காலை உணவு மேற்பார்வை பணி முதலிய பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது)

​6) அரசு பணிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். SC/ST பிரிவில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களையும் (Backlog Vacancy) உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

​7) தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.

​8) அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு காப்பாளர் தொல். திருமாவளவன், நிறுவனர் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களின் தலைமையில் சென்னையில் “ஆசிரியர்கள் கோரிக்கை -மாநில மாநாடு” ஒன்றை விரைவில் நடத்துவதாக தீர்மானிக்கப்படுகிறது.

​9) மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை விரைவில் இயற்றிட வேண்டும்.

​10) இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியான ஊதிய இழப்பை களைந்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை ப. பெருஞ்சித்திரன், மாநில செயல்தலைவர்-ATF த. சுப்ரமணி , மாநில அமைப்புச்செயலாளர்-ATF சி.அன்பழகன் மாநில அமைப்புச்செயலாளர்-ATF செல்லதுரை மாநிலத் துணைத்தலைவர்–ATF

 

மாநில துணை பொதுச் செயலாளர் பெ.தமிழ்முதல்வன்(எ) முனுசாமி வரவேற்புரை ஆற்றினார் ,

நிகழ்ச்சியின் பணிநிறைவுப் பாராட்டு விழா மற்றும் நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது ..முடிவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் குப்புசாமி நன்றி உரை வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.