Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் பூசாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் பூசாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது

Ad banner

திருச்சி திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32) இவர் கோவில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது அத்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவர் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 21) பாரதி (வயது 21) ஆகிய 2 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை வழி மறித்து அவரிடம் செலவுக்கு பணம் கேட்டு உள்ளனர். சதிஷ் குமார் பணம் தருவதற்கு மறுப்பு தெரிவித்தால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை கத்தியால் கீறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமார் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார், பாரதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.