Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 22.800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த இரும்பு பாதை காவல் நிலைய போலீசார்

0

'- Advertisement -

திருச்சி இருப்புப் பாதை, காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்களின் உத்தரவுப்படி

Ad banner

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 27/09/26 ம் தேதி) சிறப்பு ரோந்து அலுவலாக காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை,  நிஜாமுதீன் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ்

வண்டியில் , திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேட்பாரற்று கிடந்த 1 சாக்கு பையை, சோதனை செய்ததில் 22.800 கிலோ குட்கா இருந்தது..

அவற்றை பறிமுதல் செய்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.