Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தனியார் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறிந்து ரூ. 50,000 அபதாரம் வசூலித்த மாநகராட்சி ஆணையர் பொன்மணி

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் தனியார் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறிந்து ரூபாய் 50,000 அபதாரம் வசூலிக்கப்பட்டது மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி தகவல்

 

Ad banner

வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்திட ஆணையர் நே. பொன்மணி உத்தரவிட்டிருந்தார்.

 

மேலும், இம்மாநகரில் எங்கெங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது என்றும் மேலும் எங்கு பராமரிப்பு இன்றி காலியிடங்கள் உள்ளது என்றும் கணக்கீடு செய்து அவற்றில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகி உள்ளதா என கண்டறிந்து அவற்றை அழித்திட தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.09.2026) அன்று மாநகர நல அலுவலர் மரு. கார்த்திகேயன் தலைமையில் சுகாதார அலுவலர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் இரா. ஆல்பர்ட் ஆகியோர் கொண்ட குழு வார்டு 22 இல் உள்ள சாஸ்திரி ரோட்டில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தை ஆய்வு செய்தது. அங்கு கொசு புழுக்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த கட்டடம் கட்டும் கட்டுமான நிறுவனத்திற்கு ரூபாய் 50,000/= அபராதம் விதிக்கப்பட்டது.

இது போன்று 65 வார்டுகளிலும் உள்ள கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் பராமரிப்பு இன்றி போட்டு வைத்திருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு அறிவிப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும் பொதுமக்களும் மழை தண்ணீர் தேங்கக் கூடிய வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் தேவையற்ற டயர்கள், மழை நீர் தேங்கும் வண்ணம் உள்ள பொருட்கள் ஆகியவற்றை போட்டு வைக்க கூடாது என்றும், தேவையற்ற பொருட்களை மாநகராட்சியால் வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.