Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைவரையும் பாதிக்கும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்ப பெற பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா கோரிக்கை

0

'- Advertisement -

பொதுமக்கள்,வியாபாரிகளை பாதிக்கும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா கோரிக்கை

Ad banner

திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

யு.பி.ஐ. பரிவர்த்தனை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. முதலில் மக்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக, எவ்வித வரிப் பிடித்தமும் இன்றி யு பி ஐ பரிவர்த்தனை நடைபெற்று வந்தது.

இதனால் காலப்போக்கில் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றது. தற்போது தேநீர் கடை முதல் ஷாப்பிங் மால் வரை இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை சிறப்பாகச் செயல்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யு பி ஐ பரிவர்த்தனைக்கு மக்களிடமும், வணிகர்களிடமும் 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வணிகர்கள் கொள்முதலுக்கும் வரி செலுத்தி, விற்பனைக்கும் வரி செலுத்தி வியாபாரம் செய்து வரும் நிலையில், யு பி ஐ பரிவர்த்தனைக்கும் வரி செலுத்துவது விலைவாசியை மேலும் உயர்த்தும். மேலும் அது பொது மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தும்.

ஆகவே யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என ரவி விக்னேஷ் முத்துராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.