Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தோற்றத்துக்கு காரணம் கே.என்.நேரு தான்,என்னை குறித்து விமர்சனம் செய்தால் அவர் குறித்தான பல விஷயங்களை நான் வெளியில் கூற வேண்டியது வரும், எதற்கும் பயப்பட மாட்டேன் திருச்சியில் துரை வைகோ பரபரப்பு பேட்டி.

0

'- Advertisement -

திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தோற்றத்துக்கு காரணம் கே.என்.நேரு தான்,என்னை குறித்து விமர்சனம் செய்தால் அவர் குறித்தான பல விஷயங்களை நான் வெளியில் கூற வேண்டியது வரும், எதற்கும் பயப்பட மாட்டேன்

Ad banner

திருச்சியில் துரை வைகோ எம்பி பரபரப்பு பேட்டி.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி கார்னர் திட்டத்திற்காக ரயில்வே துறை சார்பில் கிட்டத்தட்ட 8 ஏக்கர் நிலமும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 95 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி சஞ்சீவி நகர், மாருதி நகர் மற்றும் ஒய் ஜங்ஷன் ஆகிய மூன்று இடங்களில் சப்வே பணிகளுக்கான டெண்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. இது சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இஎஸ்ஐ (ESI) கிளை அலுவலகம்

கடந்த 12 ஆண்டுகளாக கோரப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு வாடகை கட்டிடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த அலுவலகம் முழுமையாக செயல்பட்டால் திருச்சி மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்களான கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட சுமார் 9 மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகள் சேலம் செல்ல வேண்டிய தேவையின்றி திருச்சியிலேயே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வரவுள்ளது. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டின் உச்ச நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வது தமிழ்நாட்டிற்கு சர்வதேச அளவில் பெரும் சுற்றுலா ஈர்ப்பையும், முதலீடுகளையும் பெற்றுத் தரும் பெருமைக்குரிய விஷயமாகும்.

மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் சேருகிறேன் என எம் பி துரை வைக்கோ கூறினார் என

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறித்த கேள்விக்கு

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவித்த உடனே எனக்கு திமுக அழுத்தம் கொடுத்தார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட போது கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்றபோது கருப்பு சட்டை அணிந்து வந்தேன் அந்த சட்டையை கழட்டி விட்டு வர கூறி திமுகவினர் வற்புறுத்தினர். எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் விதமாக செயல்பட்டனர். தொடர்ந்து என்னை சிறுமைபடுத்தும், அவமானம் படுத்தும் விதமாக திமுகவினர் பேசினர்.

ஒரு கட்டுக்கதையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசி இருக்கிறார். எனது தந்தை வைகோ கோபக்காரர் என அனைவருக்கும் தெரியும். நான் எனது அப்பா, கட்சி நிர்வாகிகளுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து.. ஆனால் எங்கள் நிர்வாகிகளுக்காக கட்சியில் இருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தற்போது மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கலைஞரோடு அரசியல் முடிந்துவிட்டது.

இவரை வைத்துக் கொண்டு (ஸ்டாலின்) அரசியல் செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.. மேலும் தற்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பற்றி.. இந்த பையனை வைத்து அரசியல் செய்ய முடியாது என கே.என். நேரு சொன்னார். திமுகவினர் , மதிமுகவில் இருந்து சென்ற 2 நபர்களை வைத்து .. சமூக வலையதலங்களில் தனிநபர் தாக்குதல் செய்கிறார்கள். எதற்கும் நான் பயப்பட மாட்டேன்.

கே.என். நேரு அவர் ஸ்டைலில், பல எம்.எல்.ஏ களை மறைமுகமாக காலி செய்தவர். தற்போது திருச்சியில் ஒரு பிரமுகர் (முன்னாள் அமைச்சர் மகேஸ் பொய்யா மொழியை மறைமுகமாக) தேர்தலில் தோற்றதுக்கு காரணமே கே.என்.நேரு தான். கே என் நேருவின் சாணக்கியத்தனத்தை நான் மதிக்கிறேன்.ஆனால் எதற்கும் பயப்பட மாட்டேன்.

மிசா சட்டம் வந்தபோது நான் பிறக்கவே இல்லை என கே. என்.நேரு கூறியுள்ளார். மிசா எப்போது வந்தது என்று நேரு அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை.மிசா வந்தபோது எனக்கு 3 வயது.

அண்ணாவின் காஞ்சி இல்லத்தில் பேரறிஞர் அண்ணா முன்பு கல்லூரி மாணவனாக வைகோ பேசியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. அந்த புகைப்படம் அண்ணா காஞ்சிபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த படம் எங்கு இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இன்று சேர்ந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு மதிமுக தொண்டர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது போது அருகில் மனவை தமிழ் மாணிக்கம், வெல்லமண்டி சோமு , ரோக்கையா ஆகியோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.