திருச்சி தில்லை நகரில் டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது சைடிஷ்க்கு காசு கேட்டதால் ஆத்திரம் …
திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 43) இவர் தில்லை நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பாரில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் இங்கு ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி பாஸ்கர் (வயது 37) தென்னூர் ஆழ்வார் தோப்பு காயிதே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் ( வயது 38 )ஆகிய இரண்டு பேர் மது அருந்தினர் . பின்னர் தின்பண்டங்களுக்குரிய தொகையை சத்தியமூர்த்தி கேட்டார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்தனர் எனக் கூறப்படுகிறது , இதனால் சத்தியமூர்த்திக்கும்
அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த ஹரி பாஸ்கர் மற்றும் முகமது ரசூல் ஆகியோர் சத்தியமூர்த்தியை பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர்.
இதில் அவரது கண் மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது .காயம் அடைந்த சத்தியமூர்த்தியை சக ஊழியர்கள் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவுகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர்,
பின்னர் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் ஹரிபாஸ்கர் , முகமது ரசூல் ஆகிய இரண்டு பேர் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

