Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு முறை பயணமாக லண்டன் சென்று உள்ள முதல்வர் விஜய் நடிகை திரிஷாவுடன் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்த்தார் ….

0

'- Advertisement -

லண்டனில் நடைபெறும் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென நடிகை த்ரிஷா அங்கு என்ட்ரி கொடுத்துப் பந்தயத்தைக் கண்டுகளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமாரின் அழைப்பின் பேரில் இந்த லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பந்தயத் திடலுக்கு வந்த விஜய், அஜித்தைச் சந்தித்து ஓடிச் சென்று கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்து கெத்தாகப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

Ad banner

இந்த நிலையில், நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷா நேரடியாகப் பந்தயம் நடைபெறும் சில்வர்ஸ்டோன் தளத்திற்கு வருகை தந்தார். அஜித்குமாரின் சிறப்பு அழைப்பின் பேரில் த்ரிஷா அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.பந்தயத் திடலுக்கு வந்த த்ரிஷா, முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து கார் ரேஸை நேரில் கண்டு ரசித்தார். திரையுலகிலும் அரசியலிலும் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பந்தயத்தை ரசிக்கும் காட்சிகள் இணையவாசிகளிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம், அஜித்தின் கார் பந்தயம், தற்போது த்ரிஷாவின் திடீர் என்ட்ரி என அனைத்தும் சேர்ந்து லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கவனப்புள்ளியாக மாற்றியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் தறிகெட்டு வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து உள்ள பலரும் விஜய் லண்டன் சென்ற அரசு முறை பயணம் இதுதானா ? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.