Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாட்டில்​மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

'- Advertisement -

Ad banner

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாட்டில்​மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் …

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் அருணில் அமைக்கப்பட்ட தோழர்.மனோகரன் நினைவரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

​மாநாட்டிற்கு கிளைத் தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மூத்த தோழர் கண்ணையன் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றுப் பேசினார். கிளை துணைச் செயலாளர் எஸ்.கே.செல்வராசு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

​மண்டலச் செயலாளர் பஷீர் துவக்க உரையாற்றினார். கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் செயலாளர் அறிக்கையையும், கிளைப் பொருளாளர் சிவஞானம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

​திருச்சி மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிராஜுதீன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெருநகர் வட்டச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

​ மாநாட்டில்

​மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்.

​மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

​பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

​பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ். தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.

​1.4.2003-க்குப் பின் வாரியப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

​அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

​சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்.

​8-வது ஊதியக் குழுவில் வழங்கப்படும் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களைக் கைவிட வேண்டும்.

​மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.​இத்தீர்மானங்களை முன்மொழிந்து சங்க நிர்வாகிகள் நடராஜன், சந்திரன், அன்னக்கிளி ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக தலைவராக எஸ். கே.செல்வராசு, செயலாளராக எம். பன்னீர்செல்வம், பொருளாளராக எஸ். சிவஞானம் மற்றும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் உட்பட 11 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

டி.என்.இ.பி.டபிள்யு.ஓ. மாநிலத் துணைத் தலைவர் தீரமணி நிறைவுரையாற்றினார். நிறைவாக, கிளை துணைச் செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.