அதிக லஞ்சம் வாங்கி தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் திருச்சி மாநகராட்சி பிளானிங் உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர்
திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) பணியாற்றி வருபவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிறுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்சங்களை கொடுத்து ஐந்து மண்டலத்துக்கும் கையெழுத்து அத்தாரிட்டியை பெற்று விட்டாராம் செந்தில் பாஸ்கர். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் EE ஒரு பில்டிங் ஆய்வு செல்வதற்கு முன் செந்தில்பாஸ்கர் ஆய்வுக்கு சென்று வந்து விடுவாராம்.இது உடனடியாக பணியை முடிப்பதற்கு அல்ல,முதலில் ஆய்வு செய்து பேரம் பேசி பணத்தை பெறுவதற்காக தானாம்…
தற்போது திருச்சி மாநகராட்சியில் அதிகம் லஞ்சம் வாங்கும் அதிகாரி இவர்தானாம்….இவர் தினமும் ஒரு லட்சம் வரை ஒப்பந்ததாரர்கள் கட்டிட உரிமையாளர்கள் என பலரிடமும் பணம் பெற்று வருகிறார் என கூறப்படுகிறது, முதலில் இன்ஸ்பெக்சன் சென்று செந்தில்பாஸ்கர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் கூறுகின்றனர். இவர் கையெழுத்து அத்தாரிட்டி வாங்கியதில் மாநகாரட்சி மற்ற அதிகாரிகள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறதாம். இவர் மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கும் பங்கு பெறுவதாக கூறி அவருக்கும் அவர் பெயர் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது ..
ஆகையால் இந்த AEE செந்தில் பாஸ்கர் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிவது அவ்வளவு நல்லதல்ல என்கிற கருத்தும் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. தமிழக வெற்றி கழக ஆட்சியில் சிறிய அளவிலான லஞ்சம் பெற்ற அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரிய தலைகள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

