திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் அபிஷேக் (வயது 23) இவர் பொன்மலை போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக திருச்சி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராக பாதுகாப்பு போலீசாருடன் அங்கு வந்தார். அப்பொழுது ஒரு வாலிபர் அபிஷேக் அருகில் வந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வாலிபர் திடீரென்று பாலித்தீன் கவரால் சுற்றப்பட்ட ஒரு பொருளை கொடுத்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அருகில் வந்து கொடுத்த
பாலித்தின் கவர்ரை வாங்கி பார்த்தனர். அப்பொழுது அதில் 5 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையில் போலீசார் அபிஷேகியிடம் பையை பிடுங்கிய பொழுது கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அந்த வாலிபர் தப்பி ஓடி உள்ளார். அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது தப்பி போய்விட்டார் . இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீராசாமி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவுடி அபிஷேக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரவுடிக்கு கஞ்சா கொடுத்த வாலிபர் பற்றி போலீசார் விசாரணை செய்த பொழுது அவர் பெயர் முள்ளு அசார் (வயது 26) அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அபிஷேக், அசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து அசாரை தேடி வருகின்றனர்

