Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு

0

'- Advertisement -

திருச்சியில் கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு

Ad banner

​திருச்சி மரக்கடை பகுதியில் கடந்த (05.09.2026) சனிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில், பள்ளி மாணவர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் கீழே கிடந்த செல்போன் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

​அந்தச் செல்போன் அதைத் தவறவிட்ட உரிய நபருக்கே சென்று சேர வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, மாணவர்கள் இருவரும் அதனை திருச்சி சிங்காரத்தோப்பு சூர்யா காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் மாவட்ட மாநகர ஒருங்கிணைந்த செல்போன், சிம்கார்டு மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்க அலுவலகத்தில் கீழே கிடந்த செல் போனை அந்த இரண்டு பள்ளி மாணவர்கள் ஒப்படைத்தனர்.

 

​மாணவர்களின் இந்தச் சிறந்த நேர்மையையும் நற்சிந்தனையையும் பாராட்டும் வகையில், சங்கத்தின் சார்பில் அவர்களுக்குச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

 

​இதனைத் தொடர்ந்து, வேகத்தடையில் செல்போனைத் தவறவிட்ட நபரை தொடர்பு கொண்டு கண்டுபிடித்து ஆய்வு செய்து விசாரித்து வரகனேரியைச் சேர்ந்த சகோதரரிடம் நமது சங்க நிர்வாகிகள், அவரிடம் செல்போனைப் பத்திரமாக ஒப்படைத்தனர்.

சங்கத்திற்கும் இரண்டு பள்ளி மாணவர்களுக்கும் செல்போனை தவறவிட்ட குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட மாநகர ஒருங்கிணைந்த செல்போன் சிம்கார்டு மற்றும் உதிரிபாகம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முசையது முஸ்தபா தெரிவித்துள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.