Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம். 19+1 சீட் பர்மிட் வழங்க வேண்டும்

0

'- Advertisement -

திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்.

Ad banner

பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றம் …

அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு ம சுற்றுலா வேன் கூட்டமைப்பு அனைத்து சங்க நிர்வாகிகள் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஓட்டலில் இன்று மாநில தலைவர் குணசேகரன், மாவட்டத் தலைவர் கருப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது ..  மாவட்டச் செயலாளர் ரமேஷ்,மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 19 +1 சீட்டு பெர்மிட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மேக்சி கேப் வாகனங்களுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகை பெறுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து,முழு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இருக்கை அடிப்படையில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.