திருச்சி மாநகர அதிமுகவில் அதிரடி மாற்றத்தை மேற்கொண்டு வரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி . அதிமுகவின் எழுச்சியை கண்டு மாற்றுக் கட்சியினர் அதிர்ச்சி .
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார் ..பல அடிப்படைத் தொண்டருக்கும் புதிய பதவிகளை பரிந்துரை செய்து பெற்று தந்து வருகிறார் .இதனால் தற்போது திருச்சி மாநகர அதிமுக எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது ..
உதாரணமாக நேற்று திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள வ உ சி சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், சங்கங்கள் தொடர்ந்து காலை 6 மணி முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .. இந்நிலையில் காலை 9:45 மணி அளவில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் அமைச்சர் ரமேஷ் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்பொழுது அடுத்ததாக மாலை அணிவிக்க சிலைக்கு வெளியே அதிமுகவினர் திரண்டு இருந்தனர்.
ஆனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக வ உ சி சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தினர் நின்று கொண்டு தொடர்ந்து செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் வ உ சி சிலை அருகில் நின்ற அதிமுகவினர்
சிலையை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறியுள்ளனர்.இதனை கேட்ட த.வெ.க.வினர் பதிலுக்கு சத்தம் போட்டனர். இதையடுத்து அதிமுக எடப்பாடி வாழ்க என கோஷமிட்டனர். பதிலுக்கு த.வெ.க. வினர் முதலமைச்சர் விஜய் வாழ்க என்று பதிலுக்கு கோஷமிட்டனர் இதனால் இரு கட்சியினர் மாறி மாறிகோஷம் எழுப்பி கொண்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு போலீசார் அங்கு வந்து இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் அந்த நேரத்தில் அதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் செயல்பட்டதால் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தினர் சிலையில் இருந்து இறங்கி அதிமுகவிற்கு வழிவிட்டு சென்றனர் ..இது தற்போது அதிமுகவின் எழுச்சியை காட்டுகிறது என அப்பகுதியில் இருந்தா பொதுமக்கள் கூறினார்.
தற்போது அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு தொடர்ந்து கட்சிகளின் கலந்துகொள்ளும் அடிப்படைத் தொண்டருக்கு பதவிகளை வழங்கி வருகிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி .இந்த வகையில் மலைக்கோட்டை பகுதி செயலாளராக செயல்பட்ட மலைக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து நான்கு ஐந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது,உதாரணமாக சென்னையில் அதிமுக தோல்வி குறித்து பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி த தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பகுதி செயலாளர் அன்பழகன் கலந்து கொள்ளவில்லை மேலும் வாசுதேவன் ரகுமான் போன்ற பகுதி செயலாளர்களையும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என தடுத்து நிறுத்தியவர் மலைகோட்டை அன்பழகன் . திருச்சி வழியாக மூன்று நான்கு முறை பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்த போதும் அவருக்கு வரவேற்பு அளித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை . இதனால் அந்தப் பகுதி வட்ட செயலாளர் பொன் அகிலாண்டம் மலைக்கோட்டை பகுதி செயலாளராக நியமித்து பொது எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து பொல்லாத முக்கிய நிர்வாகிகளை அப்ப பதவியில் இருந்து பறித்து தற்போது பகுதி செயலாளர் அன்பழகனை அப்பொறுப்பிலிருந்து விலக்கிவிட்டு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்பல ஆண்டுகளாக பட்டா செயலாளர் இருந்த பொன் அகிலாண்டத்தை பகுதி செயலாளராக பணியாற்ற வாய்ப்பு அளித்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி ,புதியவர்கள் பதவிக்கு வரும்போது அவர்கள் கீழே உள்ள வட்டச் செயலாளர்கள், வார்டு செயலாளர்களை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருவார்கள் இதனால் அதிமுக கட்சி பலமடையும்..இதனை சூத்திரமாக வைத்து பொதுச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறார் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்..
ஆனால் பதவி பறிப்பில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கூறி தான் இவ்வாறு நடைபெறுகிறது என அவர் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது,இந்த நிர்வாகிகள் பதவி பறிப்பின் பின்னணியில் மாவட்ட செயலாளருக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது ஆனால் அவர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரப்படுகிறதாகவும் கூறப்படுகிறது,அதிமுக கட்சியில் வளர்ச்சி தான் முக்கியம் என திருச்சி மாநகர அதிமுகவினர் அனைவரும் தற்போது இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

