திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..
திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தார். அப்பொழுது அங்கு ஒரு வீட்டின் அருகே போதை மாத்திரை விற்னை செய்த அதே பகுதியை சேர்ந்த பிலாவுதீன் என்பவரது மனைவி பர்வீன்பானு (வயது 42) மற்றும் பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்த ஹரிஷ் ராகவேந்திரன் (வயது 19)ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் பாட்டில்கள், ஊசிகள் பணம் ரூபாய் 55 ஆயிரம், செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வருவதாக மதுவிலக்கு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த அகிலேஷ் (வயது 24) என்ற கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அகிலேஷ்யை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

