வ.உ.சி பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் விழா !
மாவட்ட செயலாளர் – முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 05/09/2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்சி கோர்ட் அருகில் உள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம்.
இந்நிகழ்வில் மாநில – மாவட்ட – மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கின்றோம். 
என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

