திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்பனை ; 2 ரவுடிகளுடன் இளம்பெண் கைது
ரூ 4.47 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது உள்ளது. இதையடுத்து எடமலை பட்டிப்புதூர் காவல் நிலைய போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது அங்கு பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரைகள் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை காஜா பேட்டையைச் சேர்ந்த முகமது சிலர்சா (வயது 23) நைனா முகமது என்கிற பேட்டை (வயது 27), கோவையைச் சேர்ந்த கருப்பசாமி மகள் சத்யபிரியா (வயது 25) என்பது தெரிய வந்தது. இதில் சத்திய பிரியா தவிர மற்ற இருவரும் ரௌடிகள் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களிடமிருந்து ரூ.4.47 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

