திருச்சி மணிகண்டம் அருகே தாய்மாமன் மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் பரிதாப முடிவு ..
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கண் தீன தயாளன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர் இவரது மகன் செல்வா (வயது 18 ) விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார் இவர் தனது தாய் மாமன் மகளை காதலித்து வந்து உள்ளார். இதனை அறிந்த அவரது தாயார் நீலா அதிர்ச்சி அடைந்தார்.
காரணம், கடந்த சில ஆண்டுகளாக இரண்டு குடும்பத்துக்கும் இடையே பகை இருந்து வந்தது. இதனால் நீலா தரப்பினர் சகோதரர் வீட்டுக்கு செல்வதோ பேசுவதோ கிடையாது. இந்த நிலையில் மகன் அவரது மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் தனது மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான செல்வா சம்பவத்தன்று வீட்டின் முன்பு உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி நீலா அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

