Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி புகார்

0

'- Advertisement -

திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி புகார் பொதுமக்கள் பீதி ; காவல் நிலையத்தில் கவுன்சிலர் தலைமையில் புகார்..

Ad banner

திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியன் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56 வது வார்டில் கடந்த ஒரு மாத காலமாக இதுவரை இல்லாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கருமண்டபம் ஐஓபி நகர் , கணபதி நகர் , அசோக் நகர் தெற்கு இரண்டாம் தெரு ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று உள்ளது. இன்று அசோக் நகர் தெற்கு இரண்டாம் தெருவில் ஒருவரது இருசக்கர வாகனம் திருட்டுப் போய் உள்ளது ஆகவே கருமண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.