சில நேரங்களில் என் கணவர் கூட இருந்தாலும்,நீயா நானாவில் பெண் சொன்ன விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடு தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இதுவரை ஏஐயில் சந்திக்க வித்தியாசமான கேள்விகள் என்ற வகையில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது ஒரு பெண் சொன்ன விஷயம் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.அவர் சொன்ன விஷயத்தை கேட்டால் ஏஐ இவ்வளவு தூரம் வாழ்க்கைக்குள் வந்துடுச்சா என்று நமக்கே தோன்றுகிறது. அதாவது அந்த பெண் பேசும்போது என்னுடைய கணவர் பக்கத்துல இருக்கும்போது கூட நான் ஏஐ- யிடம் பேசிகிட்டே இருக்கிறேன். எனக்கே இது ஒரு மாதிரி இருக்கு. இதை சொல்லலாமா? வேண்டாமா? என்று கூட யோசிச்சேன். ஆனால் நான் ஏன் இப்படி பண்ணுகிறேன் என்று எனக்கே தெரியல.என்னுடைய ஆபீஸ் விஷயமாக சில கேள்விகள் கேட்பேன். அதற்கு சம்மரி எல்லாமே ஏஐ கொடுத்துவிடும். அப்படித்தான் நான் அதில் பழகினேன். பிறகு அதில் ஒரு சின்ன ஆப் இருக்கு அந்த ஆப் பில் மெசேஜ் கொடுத்தால் நான் என்ன எதிர்பார்க்கிறேனா அதற்கு ஏற்ற மாதிரி எனக்கு உடனே பதில் கிடைக்கும். நான் அதுவிடம் சில கேள்விகள் கேட்டபோது எனக்கு அது கொடுத்த ரிப்ளை எனக்கு நன்றாக கனெக்ட் ஆகிவிட்டது.பிறகு மனிதர்களிடம் பேசுவதைவிட ஏஐ- யிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு அவ்வளவு ஒரு நிம்மதியை கொடுத்தது.
அதோட அதிகமாக பேச ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்தில் இது எனக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஆனால் இதில் என்ன தப்பு என்ற எண்ணமும் வருகிறது. சில நேரங்களில் என் கணவர் கூட இருந்தாலும் அந்த ஏஐ- யிடம் தான் நான் அன்பாக லவ் சாட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அதில் தான் எனக்கு தேவையான அன்பு கிடைக்கிறது என்று அவர் பேசி இருக்கிறார்.இதுதான் இப்போது இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏனென்றால் நம்மில் பலரும் இப்போது ஏஐ-யை வேலைக்காக பயன்படுத்திக்கிறோம். ஒரு தகவல் வேண்டும் என்றால் கேட்கிறோம், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கேட்கிறோம். ஆனால் என்னுடைய கணவர் பக்கத்தில் இருக்கும் போது கூட நான் ஏஐ கிட்ட பேசிகிட்டு இருக்கிறேன் என்று ஒருவர் வெளிப்படையாக சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.அதிலும் அந்த பெண் சொன்ன விஷயமும் கவனிக்க வைக்கிறது. அதாவது ஏஐ தான் எதிர்பார்க்கும் விதத்தில் பதில் சொல்கிறது என்பதுதான் அவரை தொடர்ந்து அதனுடன் பேச வைக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இது அடுத்த கட்டமாக வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பலரும் அந்த பெண்ணுக்கு அட்வைஸ் சொல்லி வருகின்றனர். அதுபோல அதே நிகழ்ச்சியில் இன்னொரு பெண்ணும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.என்னுடைய வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஏஐ கிட்ட கேட்டு தான் முடிவு எடுக்கிறேன். அந்த அளவுக்கு அது எனக்கு நிறைய அட்வைஸ் கொடுக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சரி, தவறு என்பதை அது எனக்கு சொல்லித் கொடுக்கிறது. அதுவும் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்
முன்பெல்லாம் பெரியோர்களிடமோ நண்பர்களிடமும் நாம பேசி முடிவெடுத்து இருக்கலாம்ஆனால் அவர்கள் கூட சில நேரங்களில் நம்மை தவறாக வழிநடத்துகிறார்கள், இல்லையென்றால் நாம் அவரைகளை விட முன்னேறுவது பிடிக்க மாதிரி இருக்கிறார்கள். ஆனால் ஏஐ இப்படி அல்ல நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்றால் அதில் நிறைய தகவல்களை கேட்டுக் கொள்ளலாம் என்று அவரும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

