Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் . பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .

திருச்சி மேலப்புத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் இப் பள்ளி விடுதியில் உணவு அருந்திய 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. (ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி அருகில் உள்ள சர்ச் வளாகத்தில் பாதிரியார்கள் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும்ம் முட்டை கிரைவி பரிமாறுப்பட்டுள்ளது . இதில் மீதமான உணவை திங்கட்கிழமை மதியம் ஹாஸ்டலில் தங்கி உள்ள மாணவிகளுக்கு வழங்கி உள்ளனர்.இதனால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பாதி பேர் ஹாஸ்டல் திரும்பி உள்ளனர்.மீதி இருவருக்கும் 30 க்கும்  மேற்பட்ட மாணவிகள் நேற்று செவ்வாய் கிழமை வரை சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது)

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹாஸ்டல் மாணவிகள் ஒத்தக்கடை பகுதியில் உள்ள சைல்டு ஜீசஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து பள்ளி நிர்வாகம் அவர்களது பெற்றோர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது ..

இந்த தகவல் அறிந்து வந்தவர்கள் எங்கள் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாதது பற்றி ஏன்  எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மருத்துவமனையில் திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது..

பெற்றோர் சிலர் கூறுகையில்:- உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? இப்பொழுதும் மேற்பட்ட மாணவிகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதா?

குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?என்று கேள்விகளை பெற்றோர் எழுப்பியுள்ளனர்.

சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம், மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.