Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

'- Advertisement -

Ad banner

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் 10 ரூபாய் இயக்கத்திற்கு நிரந்தர வருவாய் ஆதாரம் குறித்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் மாநிலத் தலைவர் சோமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செழியன், மாநில பொருளாளர் முகமது லாபீப், ஒருங்கிணைப்பாளர் முகமது யாசின், மாநில கவுரவத் தலைவர் கண்ணன், தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்ட து. மேலும் மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மின் ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் மூலம் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொட்டியம் வரதராஜன் செய்திருந்தார். இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.