திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு. ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி திருவெறும்பூர், வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தடகள போட்டியில் பாப்பா குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல்ல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று.பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தனர், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் ஜாபர் தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் பியூலா, ஆகியோர் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் சங்கச் செயலாளர் ஆறுமுகம் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ். எஸ். ரஹமத்துல்லா உடற்கல்வி ஆசிரியர்கள் ஹெலன், லோகேஷ் ,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ,முன்னதாக அத்லெட்டிக் பயிற்சியாளர்கள் அருள் ஜோதி நிவாஸ், ராஜசேகரன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

