Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 6 அம்ச கோரிக்கைகளை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் 6 அம்ச கோரிக்கைகளை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் மண்டல அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது ..

போக்குவரத்து கழக ஓய்வூதியத்தை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசை ஏற்ற நடத்த வேண்டும்,120 மாத காலம் வழங்கப்படாத டி.ஏ.உயர்வு நிலுவத் தொகையை வழங்க வேண்டும்,போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு இன்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார் .இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோவன் கேசவன், பாஸ்கரன், ஞானசேகரன், சேகர் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாணிக்கம் நன்றி கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.