திருச்சி : வணிகர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கம் அளித்த சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி

திருச்சி மாநகராட்சி 56, 57 மற்றும் 62 வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்,கிராப்பட்டி, கருமண்டபம் பகுதி வணிகர்கள் சங்க மாதாந்திர கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி விளக்கம்.
நேற்று 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.30 மணிக்கு வணிகர்கள் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் மீரான் செயலாளர் அய்யல் சாமி, பொருளாளர் சவரி முத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வி.பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வணிக நிறுவனங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அரசின் விதிமுறைகளின்படி அபராதமும் விதிக்கப்படுகிறது.சிறிய டீக்கடைகள்,சாலை ஓர சிறுகடைகள் பெட்டிக்கடைகள் பூக்கடைகள் போன்ற இடங்களில் கூடபிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என கூறியுள்ளோம் என தெரிவித்தார்.
சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி..,பொதுமக்களை வரும்போது டைகளை எடுத்து வர சொல்லுங்கள் .

வியாபாரிகள் ஆகிய நீங்கள் திருச்சி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வியாபாரிகள் அதிகாரிடம் கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

